நீதிமன்றில் முன்னிப்படுத்தப்படவுள்ள மதுஷ்!!

பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷ் இன்று   நீதிமன்றில் முன்னிப்படுத்தப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாகந்துரே மதூஷ் கடந்த 5ஆம் திகதி டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
அவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டமைக்கு அமைய, குறித்த காலப்பகுதி இன்றுடன் நிறைவடைகிறது. இந்தநிலையில், அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அத்துடன், மாகந்துரே மதூஷுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுக்களின் சந்தேக நபராக மதூஷ் குறிப்பிடப்பட்டபோதும், விசாரணைகளில் மூலம் சில குற்றசாட்டுக்களுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை எனவும் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் தனக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஆயுதங்கள் இருக்கும் இடத்தை காண்பிப்பதாகவும் அதற்கமைய தனது குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என மாகந்துரே மதூஷ் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவித்ததாக ஊடக அறிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment