விமானப்படையின் புதிய தளபதியாக எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை அவர் இன்று பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் திகதி இலங்கை விமானப்படையில் கடெட் அதிகாரியாக சுமங்கல டயஸ் இணைந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இன்றுடன் ஓய்வுபெறும் கபில ஜயம்பதி எயார் சீப் மார்ஷலாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment