வெசாக் தின நிகழ்வுகளுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்முகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தபர்.
வெசாக் தின நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து சில நாட்களுக்கு அமுல்படுத்தப்படும்.
இதனிடையே, கொழும்பு உள்ளிட்ட நகர்ப் பகுதிகளுக்குப் பிரவேசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக நடமாடும் பொலிஸ் சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment