சூறாவளி மற்றும் பெரு வெள்ளத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது.
ஆக்லஹாமா உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து வீசிய சூறாவளியால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக, நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததுடன் ஆயிரக்கணக்கான மக்களும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சிகாகோ நகரின் புறநகர் பகுதியான நேப்பர்வில்லா என்ற இடத்தில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
ஆலங்கட்டி மழையைத் தொடர்ந்து அங்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
0 comments:
Post a Comment