பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் வத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இவர் நேற்று மாபொலையில் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் ரிஸ்வான் எனும் வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், மாபொலையில் உள்ள மூன்று மாடி ஆடம்பர வீடு மற்றும் அருகில் இருக்கும் மற்றுமொரு ஆடம்பர வீட்டின் உரிமையாளர் என கூறப்படுகிறது.
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment