இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு வாழ்த்துக்கைளைத் தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
இந்திய மக்களவைத் தேர்தல் - 2019 இல் பாஜக கூட்டணி பல இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையிலேயே பிரதமர் ரணில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
வெற்றி அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துகள் நரேந்திர மோடி! இனிவரும் நாட்களில் தங்களுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment