இந்திய மக்களவைத் தேர்தலில் மோடியின் பா.ஜ.க கட்சி அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. 350 இடங்களில் முன்னிலை வகிக்கிறது பா.ஜ.க . இதன்மூலம் நரேந்திர மோடியின் தலைமையில் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்த நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் முன்னிலை வகித்து வரும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘2019 மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு, இரண்டாம் முறை பிரதமராக பதவி ஏற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு தே.மு.தி.க சார்பில் எனது இதயமார்ந்த வாழ்த்துகள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment