மலையேற்ற வீரர் ஒருவர், 24 ஆவது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தனது உலக சாதனையை தானே முறியடித்துள்ளார்.
நேபாளத்தின் சொளுகும்பு மாவட்டம், தாமே கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய காமி ரீட்டா ஷெர்பா இமயமலையில் உள்ள மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் இதுவரை 23 முறை ஏறி உலக சாதனை படைத்திருந்தார்.
இந்த நிலையில், இன்று மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார் ஷெர்பா. இதன்மூலம் 24 முறை எவரெஸ்டில் ஏறி, தனது உலக சாதனையை தானே முறியடித்துள்ளார்.
1994 ஆம் ஆண்டிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரும் ஷெர்பா, 1995 இல் மலையேறவில்லை. அந்த ஆண்டில் கடுமையான பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற குழுவினர் உயிரிழந்ததால், மலையேறும் முயற்சியை கைவிட்டார். ஆனால் அவர், தனது முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வருகிறார். குறைந்தது 25 முறையாவது எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என்பதே இவரது விருப்பம்.
பழங்குடியின மக்களான ஷெர்பாக்கள் மலையேறுவதில் கைதேர்ந்தவர்கள் என்பதால், மலையேற்ற வீரர்களுக்கு அவர்கள் வழிகாட்டியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment