காரைநகர் பகுதியில் திறக்கப்பட்டுள்ள பாரம்பரிய உணவகத்தினால் அங்குள்ள அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் நன்மை அடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு பாரம்பரிய உணவு வகைகளான இலைக்கஞ்சி, ஒடியல் பிட்டு, கீரை வடை, பழரசம், கற்றாளை யூஸ், குழைசாதம் மற்றும் சிற்றூண்டிகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
இரசாயனம் இல்லாமல் சேதன முறையில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள், பழங்களும் இங்கு விற்கப்படுகின்றன.
காரைநகர் பாடசாலைகள் மற்றும் அரச தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் பலருக்கும் இந்த உணவகம் பெரும் நன்மை அளித்துள்ளது.
குறித்த உணவகம் கடந்த 29 ஆம் திகதி காரைநகர் பிரதேச செயலர் திருமதி உஷா சுபலிங்கத்ததல் திறந்து வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment