இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படத்திற்காக சிம்ரனை பாரீஸ் அழைத்து செல்ல இருக்கிறார் மாதவன் .
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ராக்கெட்ரி நம்பி விளைவு படம் தயாராகி வருகிறது.
நடிகர் மாதவன் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஆனந்த் மகாதேவனுடன் இணைந்து மாதவன் இப் படத்தை இயக்கி வருகிறார். தமிழ், ஆங்கிலம், மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது இப்படம்.
பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளைப் படக்குழு நிறைவு செய்துள்ளது.
இறுதிகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு பாரீஸ், பெல்கிரேடு செல்ல உள்ளது. சிம்ரன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
0 comments:
Post a Comment