இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர இரசிகர் ஒருவர், தனது பி.எம்.டபிள்யூ. ரக ஆடம்பர காருக்கு, ஏ.ஆர்.ரஹ்மானைக் குறிக்கும் இலக்கத் தகட்டைப் பெற்றுள்ளார்.
சந்தர் எனும் இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர இரசிகராக உள்ளார். ஏற்கெனவே ரஹ்மானை நேரிலும் சந்தித்துள்ளார். இந்நிலையில், அண்மையில் பி.எம்.டபிள்யூ. ரக ஆடம்பர கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
காருக்கு ‘ஐ லவ் ஏ.ஆர்.ஆர்.’ என அர்த்தம் தொனிக்கும் வகையில், ‘I ARR’ என இலக்கத் தகட்டைப் பொருத்தியுள்ளார் சந்தர்.
இந்த இலக்கத் தகடு பொறிக்கப்பட்ட காருடன் தான் பிடித்துக்கொண்ட புகைப்படங்களை டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் சந்தர் வெளியிட்டார்.
இப்படங்களைப் பார்த்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ‘கவனமாக வாகனம் செலுத்துங்கள்’ எனப் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment