ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ கூறுவதாயின், தான் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் இன்று (21) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
கூட்டு எதிரணி நம்பிக்கையில்லா பிரேரணையின் ஊடாக தனக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை எனவும் எனது அரசியல் வாழ்க்கையை அழித்துவிடுதற்கு எடுக்கும் ஒரு முயற்சியே இதுவாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ கூறுவாராயின் நான் மாத்திரமல்ல, எனது கட்சியின் ஏனையோரும் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment