பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள துலுக்கன்குறிச்சியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
வழமைபோன்று ஆலையில் இன்று காலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
இதன்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பட்டாசு தயாரிப்பு அறை மிகவும் சேதமடைந்தது. விபத்துக் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment