பிரதமர் மோடி பதவியேற்பதற்கு முன்பு தனது சமூக வலைதளப் பக்கங்களில் முகப்புப் படத்தை மாற்றி புதிய படத்தை பதிவேற்றியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றார்.
இந்த நிலையில் பதவியேற்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் தனது முகப்புப் படத்தை பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.
டுவிட்டர், முகநூல் பக்கங்களின் கவர் போட்டோக்களையும் மோடி அப்டேட் செய்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் பாஜகவின் வெற்றியைக் கொண்டாட, டெல்லி தலைமை அலுவலகத்திற்கு திரண்டு வந்த தொண்டர்களைப் பார்த்து பிரதமர் மோடி வணங்கும் புகைப்படம், சமூக வலைதளப் பக்கங்களில் புதிதாக பதிவேற்றப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment