பாம்புதான் மனிதனைக் கடிக்கும் ஆனால் இதற்கு மாறாக மனிதன் பாம்பைக் கடித்துக் கொன்ற சம்பவம் ஒன்று மக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குஜராத்தின் மஹிசாகர் மாவட்டத்தில் அஜன்வா கிராமத்தில் நடந்துள்ளது.
வயல்வெளி ஒன்றில் விளைந்த மக்காசோளத்தை தொழிலாளர்கள் பாரவூர்தியில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். இதன்போது, அங்கு வந்த பாம்பைக் கண்டு அங்கிருந்தவர்கள் நாலா பக்கமும் தப்பியோடினர்.
ஆனால் பர்வாத் கலா பாரியா (வயது 60) என்ற முதியவர் அசையாமல் அங்கேயே நின்றுள்ளார். தனக்கு பாம்புகளை பிடித்துள்ள முன்அனுபவம் உள்ளது என கூறிய அவர் பாம்பை கையில் எடுக்க அது அவரது கைகள் மற்றும் முகத்தில் கடித்துள்ளது.
எனினும், பதிலுக்கு பர்வாத் பாம்பைக் கடித்து கொன்று விட்டார்.
இதனையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு முதியவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் விஷம் ஏறியதில் சிகிச்சை பயனின்றி பர்வாத் உயிரிழந்து விட்டார்.
0 comments:
Post a Comment