பிரபல பாடசாலை ஆசிரியை ஒருவர் மாணவன் மடியில் அமர்ந்து முத்தமிட்ட படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் லிவர்பூலில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்துள்ளது.
குறித்த பாடசாலையில், பணியாற்றும் Rachel Clint என்ற அந்த ஆசிரியை, நிகழ்ச்சி ஒன்றின்போது 18 வயதுடைய மாணவனின் மடியில் அமர்ந்து அவனது உதடுகளில் முத்தமிட்டுள்ளார்.
இதனால் அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டதோடு, ஒழுங்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
Rachel அன்று தான் உணவு எதுவும் அருந்தாமல், வெறும் வயிற்றில் மதுபானம் அருந்தியதால்தான் அப்படி நடந்து கொண்டதாகவும், அதனால் தன்னுடைய கல்விப் பணியில் தொடர மறுக்கக்கூடாது என்றும் கோரியிருந்தார்.
அப் பாடசாலையில் பயிலும் ஒரு மாணவனின் தந்தை, இது ஒரு மாணவனுக்கும் அவனை விட 15 வயது மூத்த ஆசிரியைக்கும் இடையில் உள்ள நம்பிக்கையான நிலையை துஷ்பிரயோகம் செய்யும் செயலாகும் என்று கூறியிருந்தார்.
விசாரணைக்குப்பின் ஒழுங்கு விசாரணைக்குழு, Rachel ஒரு நல்ல ஆசிரியை என்றும், 10 ஆண்டுகள் ஒரு ஆசிரியையாக பணியாற்றிய அவர் மீது இதுவரை ஒரு முறைப்பாடு கூட எழுந்ததில்லை என்று தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Rachelஐ விசாரித்த அதிகாரியும், அவர் ஒரு நல்ல முன்மாதிரியான ஆசிரியை என்றும் அந்த ஒரு சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட பிரச்சினைகளில் சிக்கியிருந்ததாகவும் அதனால்தான் அவர் அவ்வாறு நடந்து கொண்டார் என்று கூறியுள்ளார்.
அதனால் ஒரு ஆசிரியையாக Rachel தனது பணியை தொடர்வதற்கு ஒழுங்கு விசாரணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment