மன்னார்-பேசாலை உருத்திபுரம் பகுதியில் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா தொடர்பில் நேற்றுக் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மற்றைய இருவரையும் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை செய்ய மன்னார் நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா உத்தரவு பிறப்பித்தார்
உருத்திபுரம் கிராம பகுதியில் பாதுகாப்பு படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புத் தேடுதலின்போது 73 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டனர்.
காட்டுப்பகுதியில் இருவரும், அப்பகுதி வீடொன்றிலிருந்து இன்னுமொருவருமே கஞ்சாவுடன் கைதானதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவுக்கு மகனே பொறுப்பானவர் என தெரிவிக்கப்பட்ட நிலையில், மகன் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து அவரின் தந்தை கைது செய்யப்பட்டார்.
கைதான மூவரும் பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இம் மூவரையும் பேசாலை பொலிஸார் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போதே ஒருவரை விளக்கமறியலிலும், மற்றைய இருவரைத் தடுத்து வைத்து விசாரணை நடத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment