நினைவேந்தலிற்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்துவதைவிட, நம்மவர்களே அதிகம் இடையூறு செய்கிறார்கள்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு இலங்கை இராணுவம் இடையூறு ஏற்படுத்துவதை விட எம்மில் உள்ள சிலர், தாம்தான் முன்னின்று செய்ய வேண்டும் என இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர்.
இது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்க வேண்டிய நிகழ்வு. எனவே இந்த புனித நிகழ்வில் அரசியல் செய்யாது உணர்வுக்கு மதிப்பளியுங்கள் என வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கடசித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது..
இறுதி யுத்த கொடூரத்தின் நினைவு நாளான முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனைத்து தமிழர்களும் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்க வேண்டிய ஓர் நிகழ்வு. இந்த நிகழ்வுக்கு இராணுவம் அல்லது பாதுகாப்பு தரப்பினர் இடையூறு விளைவிப்பார்கள் என பரவலாக கூறிவந்தனர்.
ஆனால் இராணுவ தளபதி நினைவேந்தல் நிகழ்வுக்கு இராணுவம் தடையாக இருக்காது என அறிவித்துளளார்.
உண்மையில் இது வரவேற்கத்தக்க விடயம். பாதுகாப்பு படையினர் நாட்டின் சடட திட்டங்களுக்காக எமது நினைவேந்தல் நிகழ்வுக்கு இடையூறுகளை சில சந்தர்ப்பங்களில் ஏற்படுத்தியிருக்கலாம்.
ஆனால் இங்குள்ள சிலர் தங்களின் சுய அரசியல் இலாபங்களுக்காக இராணுவத்தினரை விட மோசமாக நினைவேந்தல் நிகழ்வுகளில் நடந்து கொள்கின்றனர்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். மக்கள் கண்ணீரில் அரசியல் செய்யாதீர்கள். குறிப்பாக மாகாண சபை ஆடசியில் இருந்த போது மாகாண முதலமைச்சர் என்ற வகையில் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமை தங்கினார்.
ஆனாலும் நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் அவர் போராட்ட காலத்தில் கொழும்பில் சுகமான வாழ்வில் இருந்தவர்.
போராடடத்தின் வலியை உணராதவர் அவ்வாறானவர் இந்த நிகழ்வுக்கு தலைமை தாக்கியதை அன்றே எதிர்த்தவன். முள்ளிவாய்க்கால் நிகழ்வில் அரசியல் இலாபங்களை களைந்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என்றார்.
0 comments:
Post a Comment