சீனாவில் ட்ரோன்கள் மூலம் வானில் செய்யப்பட்ட சாகசங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
குய்யாங் என்ற இடத்தில் வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பிக்கிறது. இதற்கு விளம்பரம் செய்யும் நோக்கில் 500க்கும் மேற்பட்ட ட்ரோன்களைப் பயன்படுத்தி வானில் 3டி முறையில் உருவங்கள் உருவாக்கப்பட்டன.
பல வண்ண நிறங்கள் கொண்ட விளக்குகளைக் கொண்ட ட்ரோன்கள் மூலம் உலக உருண்டை, பறவை போன்ற உருவங்கள் வானத்தை வண்ண மயமாக்கின.
வானில் நடத்தப்பட்ட வர்ண ஜாலங்களைக் கண்ட பார்வையாளர்கள் பரவசமடைந்தனர்.
0 comments:
Post a Comment