அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் மீது சுமத்தப்பட்டுள்ள தவறுகளை அவர் செய்திருக்க மாட்டார் என்பது அரசாங்கத்தின் நம்பிக்கை எனவும், அவர் அவ்வாறு தவறு செய்திருப்பதாக நிரூபிக்கப்பட்டால் தான் அரசாங்கத்திலிருந்து இராஜினாமா செய்வதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் தொடர்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்ய பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் என்ற வகையிலேயே இந்த தெரிவுக் குழுவை முன்மொழிந்துள்ளதாகவும், அமைச்சர் ரிஷாட் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மை என நம்புவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment