நீர்கொழும்பு சம்பவம் இருவர் கைது

நீர்கொழும்பில்  இடம்பெற்ற சம்பவம்  தொடர்பில்  சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தகவலை, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இருவருக்கிடையில் ற்பட்ட வாய்த் தகராறு இதற்கு காரணமாகும். இந்த சம்பவத்தின் போது கூடுதலான மதுபானம் அருந்தியிருந்த மற்றுமொறு குழுவினர் சம்பவத்தில் தலையீடு செய்தனர். இந்தத் தலையீட்டை அடுத்து அமைதியற்ற நிலை ஏற்பட்டது.

சம்பவத்தில், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி சிலவற்றுக்கு சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவு தகவல் கிடைத்துள்ளது. 

எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை. கையால் தாக்கப்பட்ட சம்வங்களே இடம்பெற்றுள்ளன.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment