மாணமகனை மாற்றிய மணப்பெண்

திருமண மேடையில் மாப்பிள்ளைக்குப் பதிலாக வேறு நபரை மணப்பெண் திருமணம் செய்து கொண்ட சுவாரஷ்யச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 

இந்தச் சம்பவம்  இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் லோனி ட்ரோனிகா நகரில் நடந்துள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும், இளைஞருக்கும் நேற்று திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

தாலி கட்டுவதற்கு முன்னர் மாலைகள் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது, அப்போது முழு குடிபோதையில் மணமகன் மேடைக்கு வந்தார்.

போதை காரணமாக அவரால் சரியாக நிற்க கூட முடியவில்லை, இதைப் பார்த்த மணப்பெண் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து குடிக்கு அடிமையானவரை திருமணம் செய்ய முடியாது என அனைவர் முன்னிலையிலும் அவர் அதிரடியாக கூறினார்.

பின்னர் மணப்பெண்ணின் உறவினரான தங்கள் வீட்டு இளைஞர் அவரை மணக்க விரும்புவதாகக் கூறினார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த மணப்பெண் அந்த இளைஞரை மணக்க ஒப்புக் கொள்ள இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமண நேரத்தில் மணமகனுக்குப் பதிலாக வேறு நபரை மணப்பெண் திருமணம் செய்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment