தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருந்த கீர்த்தி சுரேஷ். சாவித்ரி வாழ்க்கை கதையில் நடித்த மகாநடி படம், அவருக்கு நல்ல நடிகை என்ற பெயரை வாங்கிக்கொடுத்தது.
எனினும், கீர்த்தி சுரேஷிற்கு அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.
தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அவர், ஹிந்தியில் போனிகபூர் தயாரிக்கும் படத்தில் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடிக்கிறார்.
இதையடுத்து தமிழிலும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கதையின் நாயகியாக நடிக்க உள்ளார் கீர்த்தி.
ஈஸ்வர் என்ற புதியவர் இயக்குகிறார். கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த மேயாதமான், மெர்க்குரி படங்கள் வரிசையில் இதுவும் வித்தியாசமான கதையில் உருவாகிறது.
0 comments:
Post a Comment