பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் குற்றமிழைக்காத அப்பாவிகள் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்று வரும் சபை அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் குற்றமிழைக்காத தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் கைது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் தவறான முறையில் பயன்படுத்தப்பட கூடாது எனவும் மாவை சேனாதிராஜா இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment