அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பள்ளப்பட்டி பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார்.
நடைபயணமாக பேருந்து நிலையம் வந்த அவர் அப் பகுதியில் உள்ள வணிக நிறு வனங்களுக்கு உள்ளே சென்று அவர்களிடம் குறை களை கேட்டறிந்தார். போக்கு வரத்துத்துறை அமைச்சர் இந்த மாவட்டத்தை சேர்ந்த வராக இருந்தும் பெரும்பா லான பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை என்று பலர் குற்றஞ்சாட்டினர்.
இதையடுத்து அங்குள்ள கடைவீதிகளில் நடந்து வந்த மு.க.ஸ்டாலினை பின் தொடர்ந்து இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டு வந்த னர். உள்ளாட்சி நிர்வாகம் செயல்படாமல் முடங்கி கிடப் பதால் பள்ளப்பட்டியில் பல் வேறு பகுதியில் சுகாதார சீர்கேடுகள் மிகுந்து காணப்ப டுவதாகவும் பலர் புகார் தெரிவித்தனர்.
அவர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் தி.மு.க. ஆட் சிக்கு வந்ததும் பொதுமக் களின் அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதி அளித்தார். தொடர்ந்து காய்கறி மார்க்கெட் பகுதிக்கு வந்த மு.க.ஸ்டாலின் வியா பாரிகளிடம் இன்றைய விலை நிலவரங்களை கேட்ட றிந்தார். அவருக்கு வியா பாரிகள் பலர் காய்கறிகளை யும், மாம்பழம் உள்ளிட்ட பழ வகைகளையும் வழங்கினார்.
அதனை மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டார். இஸ்லாமியர் கள் அதிகம் வசிக்கும் பள்ளப் பட்டி பகுதியில் அவரை பின்தொடர்ந்து வந்த அனைத்து இஸ்லாமியர்க ளுக்கு இன்று ரம லான் நோன்பு தொடங்கியதையடுத்து அவர் களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித் தார்.
பிரசாரத்தின்போது ஏராளமான சிறுவர்கள் மு.க.ஸ்டாலின் கைகளை பற்றிக்கொண்டு சிறிது தூரம் நடந்து வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மு.க. ஸ்டாலின் அப்பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அப் போது ஏராளமான இஸ்லா மிய பெண்கள் அவருக்கு கைகுலுக்கி வரவேற்று ஆத ரவு தெரிவித்தனர். அப்போது அவரை சூழ்ந்துகொண்ட பெண்கள் இந்த தேர்தலில் உங்களுக்குத்தான் வாக்களிப் போம், எங்கள் குறைகளை நீங்கள் தீர்த்து வையுங்கள் என்றனர்.
தேர்தல் முடிவுக்கு பிறகு நமது ஆட்சிதான் வரப் போகிறது. அப்போது உங்கள் கோரிக்கைள் அனைத்தும் சரி செய்யப்படும். அத்து டன் தி.மு.க.வின் இந்த தொகு திக்கான தேர்தல் அறிக்கை யில் குறிப்பிட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப் படும் என்று மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்தார். அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் பஸ் நிலைய பகுதியில் நடந்து சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்த காட்சி. பள்ளப்பட்டி பகுதியில் வீதி, வீதியாக நடந்து சென்று தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்த காட்சி.
0 comments:
Post a Comment