இலங்கையில் மீண்டும் முடக்கப்பட்ட சமூக வலைதளங்கள் சற்று முன்னர் வழமைக்குத் திரும்பியுள்ளது.
நீர்க்கொழும்பு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற குழுமோதலையடுத்து, ஏற்றபட்ட அமைதியின்மை காரணமாக , சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாவதை தடுக்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் மீண்டும் முடக்கப்பட்டன.
எனினும் சற்று முன்னர் சமூக வலைதளங்கள் வழமைக்குத் திரும்பின.
இலங்கையில் ஈஸ்டர் நாளன்று இடம்பெற்ற பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர். இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து முடக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள் 8 நாள்களுக்குப் பின்னர் வழமைக்குத் திரும்பியருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment