ஊவா வெல்லசா பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளின் கல்வி நடவடிக்கைகள் மே 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் ஜயந்த ரத்னாயக்க வெளியிட்ட அறிக்கையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மே 20 ம் திகதி காலையில் அனைத்து மாணவர் விடுதிகளும் திறக்கப்படும். அன்றைய தினம் விடுதி மாணவர்கள் விடுதிக்குள் நுழையலாம்.
இதேவேளை, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளினதும் கல்வி நடவடிக்கைகளும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
20 ஆம் திகதி விடுதி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment