வாட்ஸ்அப் செயலியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களின் படி பயனர்கள் இனி ஸ்டோரியை இங்கும் ஷேர் செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரியை ஃபேஸ்புக் ஸ்டோரியில் ஷேர் செய்யும் வசதி ஏற்கனவே இருக்கிறது. இதே அம்சம் தற்போது, வாட்ஸ்அப் செயலியிலும் வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் புகைப்படங்கள், வீடியோக்கள், ஜிஃப்கள் மற்றும் டெக்ஸ்ட் உள்ளிட்டவற்றை ஃபேஸ்புக் ஸ்டோரியில் ஷேர் செய்ய முடியும். இன்ஸ்டாகிராம் போன்று இல்லாமல், வாட்ஸ்அப்பில் இதனைப் பயனர்கள் தானாக ஷேர் செய்ய வேண்டும். இன்ஸ்டாகிராமில் இது தானாக நடைபெறும் வகையில் வழங்கப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் காண்டாக்ட் விவரங்களை கியூ.ஆர். கோட் மூலம் பகிர்ந்து கொள்ளும் வசதியை ஐ.ஓ.எஸ். தளங்களில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.
தற்போது, இந்த அம்சம் ஆண்ட்ராய்டு தளத்தில் சோதனை செய்யப்படுகிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.151 பதிப்பில் இதற்கான வசதி சோதனை நடைபெறுகிறது.
இதில் புதிய கியூ.ஆர். கோட் பட்டன் காணப்படுகிறது. இது வாட்ஸ்அப் செயலியின் ப்ரோஃபைல் பகுதியில் காணப்படுகிறது. கியூ.ஆர். கோட் ஆப்ஷனை க்ளிக் செய்ததும் கியூ.ஆர். கோட் உருவாக்கப்பட்டு விடும். இதனை மற்றவர்களுடன் மிக எளிமையாக பகிர்ந்து கொள்ள முடியும்
இதன் மூலம் பயனர்கள் மிக எளிமையாக காண்டாக்ட்களை நேரடியாக செயலியில் இருந்தபடி சேர்க்க முடியும். இது இன்ஸ்டாகிராமின் நேம்டேக் அம்சம் மற்றும் ஸ்னாப்சாட் செயலியின் ஸ்னேப்கோட் அம்சங்களை போன்று இயங்குகிறது.
கியூ.ஆர். கோட் உறுதி செய்யப்பட்டதும், வாட்ஸ்அப் அட்ரஸ் புக் பகுதியில் தேவையான விவரங்களை தானாக பதிவு செய்து கொள்ளும்.
கியூ.ஆர். கோடை முதல் முறை உருவாக்கும் போது, வாட்ஸ்அப் அதனை ரிவோக் செய்வதற்கான வசதி வழங்கப்படும், இதனை நிறுத்தி கியூ.ஆர். கோடை்களை ரீபிளேஸ் செய்து அவற்றை வேலை செய்ய வைக்கலாம்.
இந்த அம்சங்கள் தற்சமயம் சோதனை செய்யப்படுவதால், இவை வாட்ஸ்அப் செயலியின் எதிர்கால அப்டேட்களில் வழங்கப்படலாம்.
0 comments:
Post a Comment