இரு படகுகள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்ததில் எழுவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் ஹங்கேரி நாட்டில், ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்டில் நடந்துள்ளது.
குறித்த பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால்
ஆறுகள் நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில், அங்குள்ள தனுபே (Danube), ஆற்றில் தென்கொரிய நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் படகுச் சவாரி செய்தனர். நடு ஆற்றில் படகு பயணம் செய்தபோது, எதிரே வந்த மற்றொரு படகு அவர்கள் மீது மோதியது.
இதில் படகில் பயணித்த மொத்தம் 35 பேர்களில் 7 பேர் உயிரிழந்ததாகவும், 12 பேர் மாயமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயமானவர்களை தேடும் பணியில் இரவு, பகலாக போலீசார் உள்ளிட்ட மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment