சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி பொது மத்தியஸ்தர்களுக்கான சர்வதேச குழுவில் முதலாவது பெண் பொது மத்தியஸ்தராக இந்தியாவின் ஜீ.எஸ். லக்ஷ்மி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆடவருக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலியாவின் க்ளயார் பொலொஸ்க் முதலாவது பெண் மத்தியஸ்தராக கடமையாற்றிய சில வாரங்களில் ஆடவருக்கான போட்டி ஒன்றில் பொது மத்தியஸ்தராக லக்ஷ்மி கடமையாற்றவுள்ளார்.
51 வயதான இவர் இதற்கு முன்னர் உள்ளூர் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் போட்டி பொதுமத்தியஸ்தராக 2008இல் முதல் தடவையாக பதவி வகித்திருந்தார்.
‘‘சர்வதேச பொது மத்தியஸ்தர்கள் குழு உறுப்பினராக என்னை சர்வதேச கிரிக்கெட் பேரவை நியமித்துள்ளமையானது பெரும் கௌரவத்தைக் கொடுக்கின்றது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவில் கிரிக்கெட் வீராங்கனையாகவும் பொது மத்தியஸ்தராகவும் நீண்டகாலம் சேவையாற்றியுள்ளேன்.
இந்த அனுபவங்களைக் கொண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் திறமையாக செயற்படுவேன் என நம்புகின்றேன்’’ என ஐ.சி.சி. அறிக்கையில் லக்ஷ்மி குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment