மதகுக்குள் இருந்து, குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வெல்லாவெளி மருதங்குடலை வீதியில் அமைந்துள்ள மதகு ஒன்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டது.
சடலமாக மீட்க்கப்பட்டவர் காக்காச்சுவட்டை மூன்று வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment