கணவரை இழந்ததால் வழக்குத் தொடுத்த பெண்

போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்  பிரான்சை சேர்ந்த பெண் ஒருவர்.

போயிங் விமான விபத்தில் தனது கணவரை இழந்த குறித்த பெண்  276 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுத்துள்ளார்.

எத்தியோப்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் கடந்த மார்ச் மாதம் எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில்  விபத்துக்குள்ளானது. 

சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 157 பேரும் உயிரிழந்தனர். இதே ரக விமானம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் உயிரிழந்தனர்.

5 மாதங்களில் அடுத்தடுத்து விபத்துகளில் சிக்கியதால், நாடு முழுவதும் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் விமானத்தின் முக்கியமான மென்பொருளில் குறைபாடு இருந்ததை போயிங் நிறுவனம் ஏற்றுக்கொண்டது.

இந்த நிலையில், எத்தியோப்பியாவில் நடந்த விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த நாடெஜ் டூபோஸ் சீக்ஸ் என்கிற பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,925 கோடியே 30 லட்சத்து 70 ஆயிரம்) இழப்பீடு கேட்டு போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

போயிங் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள அமெரிக்காவின் சிகாகோ நகர கோர்ட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment