சூப்பர் மார்க்கெட் தள்ளுவண்டியில் பாம்பு ஒன்று சிக்கியிருக்கும் புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின், டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள வால்ட்மார்ட் சூப்பர் மார்க்கெட்டில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
பொருள்கள் எடுத்து வரும் தள்ளுவண்டி ஒன்றை, ஊழியர் ஒருவர் எடுக்க முயன்றபோது, பாம்பு ஒன்று சிக்கித் தவிப்பதைக் கண்டு சத்தமிட்டார்.
சத்தம் கேட்டு மார்க்கெட் எதிரே நின்ற காவலர் ஒருவர் உதவிக்கு வந்து, சூப்பர்மார்க்கெட்டில் இருந்தவர்களுடன் பாம்பை மீட்க முயன்றார்.
அப்போது அங்கிருந்த ஒருவரை பாம்பு கடித்த நிலையில் விஷத்தன்மை இல்லாத பாம்பு என்பதால் அவர் உயிர்தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment