ஒரு நாடு என்ற வகையில் நாம் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளோம் எனவும், இந்த இஸ்லாம் அடிப்படைவாதம் என்பது பயங்கரவாதி ஸஹரான் போன்ற குண்டுதாரிகள் எட்டுப் பேரின் பிரச்சினையல்ல எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.
இன்று இந்த அடிப்படைவாதம், நீதித்துறை, மருத்துவத்துறை, வங்கி, வைத்தியசாலை, பொருளாதார கேந்திர நிலையம், பாதுகாப்புப் பிரிவு என அனைத்திலும் ஊடுறுவியுள்ளது. எந்தவொரு அழிவையும் ஏற்படுத்த முடியும் வகையில் புற்றுநோய் போன்று புரையோடிப்போய் உள்ளது.
இந்த மொஹமட் சாபி வைத்தியருக்கு எதிராக முன்னெடுக்கும் விசாரணைக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளிடமிருந்து அழுத்தங்கள் விடுக்கப்படுகின்றன.
நான் விளங்குகின்ற வகையில், கடந்த 10 அல்லது 15 வருட காலப் பகுதியில் மாத்திரம் எமது நாட்டில் பிறக்கவிருந்த சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் பிறக்க விடாது தடுக்கப்பட்டுள்ளன.
இது எனது அனுமானம். இது சிலவேளை, 5 லட்சம் வரை வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. எல்லா வைத்தியசாலைகளிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எமது சிங்களவர்கள் ஒற்றுமைப்பட்டால் அன்றி, இதற்கு விடைகாண முடியாது. இதனால், முழு சமூகமும் இனவாதத்தை மறந்து, உணர்வுகொண்டு, இந்த நாட்டுக்காக தனக்கு முடியுமான காரியத்தை செய்ய வேண்டியுள்ளது எனவும் தேரர் மேலும் கூறினார்.
0 comments:
Post a Comment