தம்மை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து கட்டாய விடுமுறை அனுப்பியமைக்கு எதிராக பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இதற்கமைய தம்மைக் கட்டாய விடுமுறையில் அனுப்ப ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்குத் தடை உத்தரவொன்றை வழங்குமாறும், தமது சட்டத்தரணி மூலம் குறித்த மனுவில் பூஜித் ஜயசுந்தர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்குச் சரியான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற காரணத்தினால் பூஜித் ஜயசுந்தர ஜனாதிபதியினால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு, சி.டீ. விக்ரமரத்ன பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
0 comments:
Post a Comment