கனடாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் சுமார் மூவாயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள கியூபெக் மற்றும் ஓட்டா ஆகிய பகுதிகளில், தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கியூபெக் மாநிலத்தில் வெள்ளப்பெருக்குக் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், அப் பகுதிகளில் உள்ள மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
குறித்த பகுதியில் மேலும், 3.6 அங்குலங்கள் (9.1 சென்டிமீட்டர்கள்) மழை பெய்யும் என்றும், வாகனச் சாரதிகள், பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இந்த நிலைமை இந்த வார இறுதி வரை தொடரும் என்றும் கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment