காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு ஜி.பி.எஸ். கருவிகளை எடுத்துச் சென்ற பேருந்து நடத்துநர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 7 ஜி.பி.எஸ். கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, காத்தான்குடியில் இருந்து கொழும்பு தனியார் பேருந்தில் பொதியொன்றில் ஜி.பி.எஸ். கருவிகள், உரிமையாளர் இல்லாமல் கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்து பேருந்து நடத்துநர் மற்றும் ஜி.பி.எஸ். பொதி அனுப்பிய வர்த்தகர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
கல்லடி பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள வீதி சோதனைச் சாவடியில் வைத்து, காத்தான்குடியில் இருந்து கொழும்பிற்கு புறப்பட்ட தனியார் பேருந்தை நேற்று விசேட அதிரடிப்படையினர் நிறுத்தி சோனையிட்டனர்.
இதன்போது பேருந்தின் முன்பகுதியில் இருந்த பொதியை சோதனையிட்டனர். இதனிடையே இதற்கு யாரும் உரிமை கோராத நிலையில், காத்தான்குடியில் இருந்து வர்த்தகர் கொழும்பில் ஒப்படைக்கத் தந்ததாக நடத்துநர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் குறித்த பொதியை பரிசோதனை செய்தபோது, அதிலிருந்து இரண்டு ஜி.பி.எஸ். வருவிகள் இருப்பதை கண்டனர்.
இதையடுத்து, நடத்துநரை கைதுசெய்த பொலிஸார், பொதியை வழங்கிய காத்தான்குடி வர்த்தக நிலையத்திற்கும் சென்று சோதனையிட்டனர். இதன்போது அங்கிருந்தும் ஐந்து 5 ஜி.பி. எஸ். கருவிகள் கைப்பற்றப்பட்டதுன், குறித்த வர்த்தகரையும் கைதுசெய்தனர்.
இது தொடரபான விசாரணைகளை குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.
0 comments:
Post a Comment