விளையாட்டு வடிவில் எமன் வந்ததால் கோடீஸ்வர தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் ஒன்று தமிழகத்தில் நடந்துள்ளது.
அழுகிய நிலையில் மீட்கப்பட்ட இவர்களின் சடலத்துடன் அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றும் கிடைத்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரையில் வசித்து வந்த கர்நாடகாவை சேர்ந்த வேங்கட சுப்ரமணியன் (41) என்பவரும் மீனாட்சி (33) என்ற பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்தனர்.
ஓன்லைனில் தொழில் செய்து வந்த இந்த தம்பதி கோடீஸ்வரராக இருந்தனர். அதில் வந்த பணத்தை பல வகையிலும் முதலீடு செய்தனர்.
திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத சோகம் இவர்களை வாட்டி எடுத்தாலும், மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர்.
இந்த நிலையில், ரம்மி வடிவில் வந்தது எமன். ஓன்லைன் ரம்மி விளையாட்டில் தம்பதியர் இருவருமே ஆர்வம் காட்டி வந்தனர். இதன்மூலம் நிறைய சம்பாதித்தனர்.
நாளடைவில் ரம்மி விளையாட்டில் ஏராளமான பணத்தை இழந்து கடனாளி ஆன நிலையில் காரை விற்றனர்.
இதனையடுத்து, சில தினங்களாக வேங்கட சுப்ரமணியன்-மீனாட்சி தம்பதி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த இருவரின் அழுகிய சடலங்களை கைப்பற்றினார்கள்.
இறப்பதற்கு முன்னர் அவர்கள் எழுதியிருந்த கடிதத்தில், தங்களின் மரணத்திற்கு யாரும் காரணமில்லை எனக் கூறப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment