ரியல்மி பிராண்டு தனது புதிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவலை டீசர் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறது. அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் புதிய டீசரில் ரியல்மி X ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போனில் சோனி IMX586 48 எம்.பி. சென்சார், பாப்-அப் ரக செல்ஃபி கேமரா மற்றும் 91.6 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என ரியல்மி டீசரில் வெளிப்படுத்தியது. தற்சமயம் அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் புதிய டீசரில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.
ரியல்மி X ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்குவது மட்டுமின்றி புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் மே 15 ஆம் தேதி அறிமுகமாகும் என்றும் தெரிகிறது. ரியல்மி X ஸ்மார்ட்போனுடன் ரியல்மி X லைட் ஸ்மார்ட்போனும் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. ரியல்மி X லைட் ஸ்மார்ட்போன் ரியல்மி 3 ப்ரோ மாடலின் ரீ-பிராண்டு செய்யப்பட்ட மாடலாகவும் இருக்கலாம்.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் ரியல்மி X ஸ்மார்ட்போனில் நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா, கிரேடியண்ட் பேக் பேனல் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என தெரிகிறது. இதேபோன்று ரியல்மி X லைட் ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் நாட்ச், டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி X ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2340 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு பை சார்ந்த கலர் ஓ.எஸ். 6.0, 48 எம்.பி. மற்றும் 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள், 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என தெரிகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment