தான் நிச்சயமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அல்ஜெஸீரா செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எடுத்த தீர்மானம் இன்று, நேற்று எடுத்த ஒன்று அல்லவெனவும், அது எனது நீண்டகாலத் தீர்மானமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் அவ்வாறு தீர்மானம் எடுத்ததனால்தான், அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக் கொள்ள நடவடிக்கை எடுத்தேன் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment