இராணுவம் மற்றும் விமானப்படையினர் அணியும் சீருடைகளுடன் ஒருவர் கைது

இராணுவ மற்றும் விமானப்படையினர் அணியும் சீருடைகளுக்கு நிகரான வகையிலான பெருந்தொகை உடைகள் மற்றும் புடவைகளுடன் நபரொருவர் வெளிமடை பொலிசார் உள்ளிட்ட இராணுவத்திரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து இராணுவத்திரும்,வெளிமடை பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றி வலைப்புத்தேடுதலின்போது வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெரும் பொதிகள் சோதனையிடப்பட்டன.
இச் சோதனையின்போது பெருந்தொகையிலான இராணுவ மற்றும் விமானப்படையினர் அணியும் சீருடைகளுக்கு நிகரான வகையிலான பெருந்தொகையிலான உடைகள் மற்றும் புடவைகளைக் கண்டடுபிடித்து
குறித்த சீருடைகளை மீட்ட பொலிஸார் அவ்வீட்டின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.
வெளிமடைப்பகுதியின் திமுத்துகம என்ற கிராமத்தின் வீடொன்றிலிருந்தே மேற்குறிப்பிட்ட உடைகளும்,புடவைகளும் பெருந்தொகையில் மீட்கப்பட்டனவாகும்.
கைது செய்யப்பட்ட நபர் விசாரணையின் பின்னர் வெளிமடை மஜிஸ்ரேட் நீதிமன்னறத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று பொலிசார் தெரிவித்தனர்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment