மரங்களை அதிகமாக நடும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளர் நடிகர் விவேக்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1978-ம் ஆண்ல் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது.
இதில் முன்னாள் மாணவரும், நடிகருமான விவேக் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து, நிரூபர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் வறண்டதுடன், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்ய வேண்டும் என்றால் தொடர்ந்து மரக்கன்றுகளை நட வேண்டும்.
விடுமுறை நாள்களில் தங்கள் பகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார இளைஞர்கள் முன்வர வேண்டும். தற்போது மரக்கன்றுகள் நட்டால் மட்டுமே தான் 10 ஆண்டுகளில் மழை பொழிவை பெற முடியும்.
‘மலைகளின் இளவரசி’ கொடைக்கானலும், அரசியான ஊட்டியையும் கிழவியாக மாற்றி வருகிறோம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்துக்கு அதிகளவு மரங்கள் வெட்டப்பட்டதே காரணம் ஆகும்-என்றார்.
0 comments:
Post a Comment