ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணை – ஜனாதிபதியுடன் கலந்துரையாட தீர்மானம்!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

இதுவரையில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நேற்று கையளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும் கையளிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment