பிரண்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற காண்ட்ராக்டர் நேசமணியின் கதாப்பாத்திரம், 18 ஆண்டுகளுக்குப் பின்னர், சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியுள்ளது.
கட்டடப் பொறியாளர்கள் வாட்ஸ் ஆப் குழுவைச் சேர்ந்த ஒருவர், சுத்தியலின் புகைப்படத்தை வெளியிட்டு இது என்ன என்று கேட்டிருக்கிறார்.
அதற்குத் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் சுத்தியல் என்று கூறியதுடன், அது தலையில் விழுந்து காண்ட்ராக்டர் நேசமணிக்கு அடிபட்டு விட்டதாக பிரன்ட்ஸ் படத்தின் காட்சியை குறிப்பிட்டு பதில் அளித்தார்.
இதைக் கேட்ட அந்த வெளிநாட்டவர், உண்மையிலேயே நேசமணி காயம் அடைந்து விட்டதாக பிரே ஃபார் நேசமணி என்று ஹேஷ்டாக் உருவாக்கினார்.
அது தற்போது டுவிட்டரில் பிரபலமாகியுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள நடிகர் ரமேஷ் கண்ணா, 18 ஆண்டுகளுக்குப் பின் இந்த நகைச்சுவைக் காட்சி பேசப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment