கிளிநொச்சியில் கடும் வறட்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக, 2 ஆயிரத்து 738 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக வட பகுதியின் சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு இதனால் முகம் கொடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், கடந்த சில நாட்களாக நிலவிவரும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 738 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 82 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 ஆயிரத்து 766 குடும்பங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்து 93 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குறித்த நிலையத்தினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில், கோணாவில், அக்கராயன், காஞ்சிபுரம், தட்டுவன்கொட்டி, பூநகரி, கண்டாவளை, ஆகிய பகுதிகளில் குடிநீருக்கான தட்டுப்பாடும் நிலவி வருகின்றது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவலுக்கு இணங்க கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவில் 130 குடும்பங்களைச் சேர்ந்த 403 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில் 2068 குடும்பங்களைச் சேர்ந்த 8679 பேர் பாதிக்கப்;பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கரைதுரைப்பற்று, ஆகிய பிரதேச செயலர் பிரிவுகள் வறட்சியினால் பாதிக்கப்படடிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் கீழ் 1967 குடும்பங்;களைச் சேர்ந்த 6296 பேரும், கரைதுறை பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் 33 ஆயிரத்து 797 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment