எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை கருத்திற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டால் நாட்டை ஒருபோதும் அபிவிருத்தி செய்ய முடியாதென போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வெயாங்கொடையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அர்ஜுன ரணதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“நாடு தொடர் குண்டுத் தாக்குதலை தொடர்ந்து பல நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்துள்ளது.
ஆனால் தற்போதைய அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவியை எவ்வாறு பெற்றுகொள்வது என்பதை கருத்திற்கொண்டே செயற்பட்டு வருகின்றது.
இவ்வாறு எதிர்கால அரசியல் இருப்பு குறித்து கனவு காணும்போது நிகழ்காலத்தில் செய்ய விடயங்கள் யாவும் மறக்கடிக்கப்படும்.
ஆகையால் வெறுக்கத்தக்க செயற்பாடுகள் மேற்கொள்வதை நிறுத்திவிட்டு நாட்டின் அபிவிருத்தி மீது அனைவரும் அக்கறை செலுத்த வேண்டும்” என அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment