கதையின் நாயகியாக நடித்த த்ரிஷாவுக்கு அனைத்துப் படங்களுமே தோல்வியாக அமைந்தன. அதனைத் தொடர்ந்து, விஜய் சேதுபதியுடன் நடித்த 96 படம், அவருக்கு ஹிட்டாக அமைந்ததால், த்ரிஷாவின் மார்க்கெட் மறுபடியும் சூடு பிடித்துள்ளது.
இந்த நிலையில், ராங்கி படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது த்ரிஷா திடீரென்று மயங்கி விழுந்ததாகவும், அதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவின.
இந்த செய்தியை த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் மறுத்துள்ளார். த்ரிஷாவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். த்ரிஷா பற்றி வெளியான வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment