யாழ்.பல்கலை துணைவேந்தர் பதவியிலிருந்து இடைநிறுத்தம்

யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர். விக்னேஸ்வரன் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்திலிருந்து கடிதம் தொலைநகல் ஊடாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் செயலரால் கையொப்பம் இடப்பட்ட  இந்தக் கடிதத்தில், பதவி இடைநிறுத்தல் தொடர்பான காரணங்கள் அல்லது வேறு தகவல்கள் எவையும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment