சுஜித் இயக்கத்தில் பிரபாஸ் - ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகி வரும் ‘சாஹோ’ படத்துக்கு இசையமைக்க ஜிப்ரான் ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘சாஹோ’. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர்களாக ஒப்பந்தமாகி இருந்த சங்கர்-எஹ்ஸான்-லாய் படத்திலிருந்து சமீபத்தில் விலகினர். இதையடுத்து இந்த படத்திற்கு இசையமைக்க வேறு இசையமைப்பாளர்களை படக்குழு தேடி வந்தது.
இந்த நிலையில், படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஜிப்ரான் பின்னணி இசையை மட்டும் கவனிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாடல்களுக்கு வேறு சில இசையமைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment