சுவிஸில் பிரித்தானிய இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டமைக் குறித்து, அவரின் காதலனிடம் விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
‘சுவிஸில் கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி பிரித்தானிய இளம்பெண் அன்னா ரீட் நட்சத்திர விடுதி ஒன்றின் குளியலறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவரது காதலரான 29 வயது மார்க் ஷாஸில் கைது செய்யப்பட்டார்.
அன்னா ரீடை இவர் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டார்.
எனினும், ஷாஸில் தனது நிலையை விளக்கி, இந்த விவகாரத்தில் தமக்கு தொடர்பு இல்லை என வாதித்து வருகின்றார்.
ஷாஸிலின் வாக்குமூலத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ள அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment